இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்றத் தெரிவில் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது ருவிற்றரில் தெரிவித்துள்ளதாவது-
ஜனாதிபதி முற்றாக சட்டபூர்வமான தன்மையை இழந்து விட்டார். அவர் வீட்டுக்குச் செல்வதையே மக்கள் விரும்புகின்றனர்.
ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக நாடாளுமன்றம் விரைவில் முடிவைக் காண்பிக்கும். ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்றத் தெரிவில் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை.
அவர் தனது தொகுதியில்கூட இந்தமுறை வெற்றிபெறவில்லை.எனவே அவர் பிரதமராகவும் உரிமையில்லை-என்றுள்ளார்.
Discussion about this post