ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அலுவலகம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், அதை நோக்கிப் பேரணி செல்வது தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்கள் திடீரென விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்றுப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் பேரணி, ஜனாதிபதி செயலகம் அருகிலுள்ள ’கோத்தாகோகம’வை சென்றடையும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்ற பொலிஸார், வீதித் தடைகளையும் அமைத்திருந்தனர். இதனால் போராட்டக்காரர்கள் திடீரென, மாற்று வழியூடாக விஜேராம மாவத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டின் முன்பாக சுமார் பல ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர்.
வீட்டின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை தகர்த்து உள்நுழைவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு அந்த முயற்சி தடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பிரதமரின் வீட்டின் முன்பாகவுள்ள வீதியை மறித்து போராட்டக்காரர்கள் அமர்ந்திருந்தனர். இதன்போது வெள்ளை நிறத்திலான பிரதமரின் வீட்டுச் சுவரில், போராட்ட வாசகங்களை எழுதினர்.
‘கொலைக்கார கோத்தா வீட்டுக்குப் போ’, ‘அன்று ரத்துபஸ்வல இன்று ரம்புக்கன’, ‘225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம்’ ஆகிய வாசகங்களையும் எழுதினர்.
அதன் பின்னர் நேற்று இரவு 6 மணியளவில் காலிமுகத்திடலுக்கான வீதித் தடைகள் அகற்றப்பட்டமையால், பிரதமரின் இல்லத்திலிருந்து காலிமுகத்திடல் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்றனர்.
Discussion about this post