2022ஆம் ஆண்டில் பிரதமர் பதவியில் மாற்றம் வரப்போவதாக
தெரிவிக்கப்படுவது அடிப்படை ஆதாரமற்றது என அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ்
பத்திரன கூறியுள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில், 2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ரணில்
விக்ரமசிங்கவுக்கோ அல்லது பசில் ராஜபக்ஷவுக்கோ வழங்கும் திட்டம் உள்ளதா
என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்தவும் வெளிநாட்டுக் கடன்களைப்
பெற்று கொள்ளவும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் திட்டம் உள்ளதா என அவர் வினவினார்.
இதன் போதே, இந்த விவகாரம் அடிப்படை ஆதாரமற்றது என
அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
Discussion about this post