நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகனான முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ரணில் பதவியேற்ற சில நிமிடங்களில் இவர்கள் ருவிற்றர் வாயிலாகத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடலில் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களின் பின்னர் பதவி விலகிய மஹிந்த ராஜபக்ச தற்போது பாதுகாப்பு அச்சத்தால் திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர்களின் வீடுகள் மக்களால் தீயிடப்பட்ட நிலையில் நாமல் ராஜபக்ச தற்போது எங்குள்ளார் என்பது தெரியவில்லை.
இந்தநிலையில் அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post