நியூசிலாந்தில் பியர் குடித்த இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தை சேர்ந்த எய்டன் சாகலா என்ற நபர் கடந்த மார்ச் 7ம் திகதி பியர் குடித்த பின் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.
சாகலாவின் மரணத்தால் தூண்டப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கலந்த பியர் கேன்களின் பலகைகளில் கொம்புச்சா போத்தல்களும் இருந்துள்ளன.
அங்கு அதிகாரிகள் இதுவரை 328 கிலோ மெத்தாம்பேட்டமைனை என்ற போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த மார்ச் 16ம் திகதி அன்று ஆயுதமேந்திய பொலிஸ் அதிகாரிகள் மனுகாவில் உள்ள ரியான் பிளேஸில் உள்ள ஒரு கிடங்கை முற்றுகையிட்டனர்.
அப்போது ஹனி பியர் ஹவுஸ் பியர் கேன்களின் பலவற்றிலும் மெத் கலக்கப்படுவதை கண்டுபிடித்து கைப்பற்றினர். தொழிற் சாலையிலிருந்து கால் டன்னுக்கும் அதிகமான மெத்தை படிக வடிவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் மீட்டெடுக்கப்பட்ட திரவ வடிவிலான மெத் பற்றி பகுப்பாய்வு செய்து வருகிறார்கள். சகாலா பியர் குடித்த அன்று நடந்தவற்றை பற்றி விவரங்களை அவரது சகோதரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மருத்துவராக பணிபுரியும் ஏஞ்சலா என்பவரோடு அவரது சகோதரரான சகாலா வசித்து வந்துள்ளார். அவரது வீட்டிலிருந்து கொண்டே வேலைக்குப் போய்க் கொண்டிருந்த சகாலா அன்று கொஞ்சம் தாமதாக வீட்டிற்கு வந்துள்ளார்.
தன்னுடன் பணிபுரிபவர்கள் வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்றதன் பேரில் அவரும் சென்றுள்ளார்.
அதுவரை பியர் குடித்து பழக்கமில்லாத சகாலா அன்று பியர் குடித்திருக்கிறார். பின்னர் தாமதாக வீடு வந்த சகாலாவை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு ஏஞ்சலா கடைக்கு சென்றுள்ளார்.
அதற்குள் ஏஞ்சலாவின் கணவர் சத்தம் போட மீண்டும் வீட்டுக்கு வந்த அவர் தனது சகோதரன் உடல் நடுங்கிக் கொண்டு கிடந்ததை பார்க்கிறாள். சகாலா வலிப்பு வந்ததை போல் துடிதுடித்து கொண்டிருந்த சமயத்தில் “நான் இறப்பதை போல உணர்கிறேன்” என கூறியுள்ளார்.
பின்னர் அவருக்கு முதலுதவி செய்த ஏஞ்சலா பின்னர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Discussion about this post