பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக நேற்று (வியாழக்கிழமை) முதல் பால்
தேநீர் விற்பனையை கடைகளில் நிறுத்த தீர்மானம் .
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்த
விடயத்தினைக்கூறியுள்ளார்.
ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 80 ரூபாய்கும் மேலாக
கூட்டபடவுள்ளதால், பால் தேநீரை விற்பனை செய்வதிலிருந்து விலக
முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பால் மாவின் விலை கூடியுள்ள இவ்வேளையில் மீண்டும் ஒரு கப் பால்
தேநீரின் விலையை அதிகரித்தால் அதனை நுகர்வோர்களால் தாங்கிக் கொள்ள
இயலாது என்பதற்காகவே இவ் முடிவு எடுக்கபட்டுள்ளதாக அவர்
கூறியுள்ளார்.
Discussion about this post