சவூதி அரேபியா பாலைவனத்தின் நடுவே முற்றிலும் கண்ணாடியால் ஆன சொகுசு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மராயா என்ற இந்த கண்ணாடி கட்டிடத்தை இரு இத்தாலிய வடிவமைப்பு நிறுவனங்கள் இணைந்து கட்டியுள்ளன.
இந்நிலையில் பாலைவனத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கு தீர்வாக புதிய வகையான கண்ணாடி வகையினால் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வகை கண்ணாடி மூலம் மணல் புயல்கள், வெப்ப நிலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் பாலைவனத்தில் நிகழக்கூடிய பிற வானிலை சவால்களையும் சமாளிக்க முடியும் என்று கட்டிடத்தை வடிவமைத்த நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்த கட்டிடம் நட்சத்திர உணவு விடுதியாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post