புதிய இணைப்புபாரிஸ் 2024 ஒலிம்பிக் ஆடவருக்கான 400 மீற்றர் 2 ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் அருண தர்ஷன (Aruna Darshana) தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மூன்று அரை இறுதிப் போட்டிகள் முடிவில் அருண தர்ஷன TR 17.2.3 விதியை மீறும் வகையில் மற்றைய தடத்தில் கால் பதித்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், மூன்று அரை இறுதிப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 6 வீரர்களும் அடுத்த அதிசிறந்த நேரங்களைப் பதிவுசெய்த இருவருமாக 8 வீரர்கள் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளனர்
முதலாம் இணைப்பு2024 பாரிஸ் ஒலிம்பிக் (Olympic Games Paris 2024 ) ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன (Aruna Darshana) 05ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.இந்த போட்டியானது, இன்று (06) உள்ளூர் நேரப்படி இரவு 11:12 மணியளவில் இடம்பெற்றது.
இந்த நிலையில், குறித்த போட்டியில் பங்கேற்ற அருண தர்ஷன, 44.7.5 வினாடிகளில் போட்டியை முடித்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை பதிவு செய்தார்.
முதல் இலங்கையர் சாதனைஇதற்கு முன்னதாக ஒலிம்பிக் வரலாற்றில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இலங்கையர் என்ற சாதனையையும் அருண தர்ஷன பெற்றுள்ளார்.
இதேவேளை, ஒலிம்பிக் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் கிராணி ஜேம்ஸ் (Kirani James) 43.78 வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பெற முடிந்தது.
இப்போட்டியில் இரண்டாமிடம் பெற்ற முசாலா சமுகொங்கா (Muzala Samukonga) 43.81 வினாடிகளில் ஓடி சாதனை படைத்துடன், கிறிஸ்டோபர் பெய்லி (C. Bailey) 44.31 வினாடிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
Discussion about this post