ஆணை இல்லாமல் ஆட்சியில் இருக்க அரசாங்கம் முயன்றால் வீதியில்
இறங்குவோம் எனகூறிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற
உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கம் தன்னிச்சையாக மக்களிடம் இருந்து
அதிகாரத்தை பெற முயற்சிப்பதாக கூறினார்
இப்போதய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டு வருடங்களுக்கு
அதிகரிப்பதற்கான நடவடிக்கை சம்மந்தமான அறிக்கைகள் தொடர்பிலேயே இவ்
விடயத்தை அவர் கூறினார்
பொது வாக்கெடுப்பு மூலம் விதிமுறைகளை கூட்ட முடியும் எனவும்
ஒரு பிரிவினர் பொதுமக்களுக்கு சேவை செய்ய ஆர்வமாக இருந்தால், வரும்
மூன்று ஆண்டுகளில் தங்கள் முடிவுகளை நிறைவேற்றி புதிய ஆணையை பெற
முடியும் என கூறினார் .
ஆகவே தன்னிச்சையான நடவடிக்கைகளின் மூலம் அதிகாரத்தை பெறும்
எந்தவொரு முடிவுக்கும் தமது கடும் ஆட்சேபனையை கூறுவதாக அத்தநாயக்க
எம்.பி மீண்டும் கூறீனார்
Discussion about this post