பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ரபிட் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை ஒன்றை
இன்று மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல
சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.
இந்த என்டிஜன் பரிசோதனையில் பாராளுமன்ற ஊழியர்கள் மற்றும் பாராளுமன்ற
செய்திகளை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களும் கலந்துகொள்ள முடியும்.
பாராளுமன்றம் இன்றுகூடுவதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்
ஊடகவியலாளர்களுக்கு வசதியாகவே இந்த பரிசோதனை நடவடிக்கை ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கின்றது.
அத்துடன் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள்,
ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இந்த பரிசோதனை நடவடிக்கை ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தன.பாராளுமன்றத்தின் சுகாதார பாதுகாப்பை
கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது எனவும் அவர்
குறிப்பிட்டார்.
Discussion about this post