பாம்பு விசத்தை முறிப்பதற்கான தடுப்புகள் மருந்து இல்லாமையால் இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என்று அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று வாரங்களுக்குள் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். சில மருந்துகளுக்கு தற்போது பயன்படுத்தப்படும் மாற்று மருந்துகளும் அடுத்த 3 வாரங்களுக்குள் மருத்துவமனை களஞ்சியங்களில் இருந்து படிப்படியாக குறைவடையும்.
மருத்துவமனைக் களஞ்சியங்களில் இருந்து 20 வீத மருந்துகளே தற்போது வழங்கப்படுகின்றன. அவையும் எதிர்வரும் காலங்களில் நிறைவடையவுள்ளன. தற்போது மருத்து்வமனைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு மாத்திரமே மருந்துகள் வழங்கப்படுகின்றது. வயதான நோயாளிகளை விட இளம் நோயாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார்.
Discussion about this post