சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி மாவட்ட செயலாளர்களுக்கு நிதியை உடனடியாக ஒதுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதிப்புகள் குறித்து அறிவிக்க விசேட பொலிஸ் அழைப்பு..
தற்போதைய பாதகமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவுவதற்காக பொலிசார் விசேட செயற்பாட்டு அறையை நிறுவியுள்ளனர்
துரித ஆழைப்பு – 0112421820 மற்றும் பிற இணைப்புகள்: 0112439212, 0112013036, 0112013039.
மின்னஞ்சல்:
disasterops@police.gov.lk –
ஆகிய இலக்கங்களுக்கு சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Discussion about this post