கோதுமை மா விலை அதிரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 20 தொடக்கம் 30 ரூபாவரையில் விலை உயர்த்தப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது என்று அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதேவேளை உணவகங்களில் உணவுப் பொதிகளின் விலை 20 தொடக்கம் 30 ரூபாவரையில் அதிகரிக்கப்படும் என்று இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கொத்து ரொட்டி ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
Discussion about this post