போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 1000 – 1 500 வரையிலான சிறுவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
காலி – நாகொட பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் நூற்றுக்கு 65 சதவீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை படிப்பு நிறுத்தம்
நாட்டில் உள்ள மொத்த பாடசாலை மாணவர்களில் 3 வீதமானவர்கள் அல்லது சுமார் 129,000 சிறுவர்கள் பாடசாலை படிப்பை நிறுத்தியுள்ளதாக அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எடைக் குறைவான குழந்தைகளின் வீதம் மேலும் அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகி உள்ளன.
இது 2022 ஆம் ஆண்டில் 19.5 வீதமாகவும் 2023 ஆம் ஆண்டில் 21 வீதமாகவும் காணப்படுவதாக சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள சுகாதார மற்றும் போஷாக்கு பணியகம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post