பாடசாலை மாணவர்களுக்கு வழங்க்கப்பட்டுள்ள இஸ்லாம்
பாடநூல்களை மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறு கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம்
கூறீயுள்ளார்.
கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.என். அயிலப்பெருவினால்
அனைத்து தேசிய பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடநூல்கள் நேரடியாக
விநியோகிக்கப்படும் பாடசாலைகளின் அதிபர்களை விழித்து அனுப்பட்டுள்ள விஷேட
கடிதம் ஒன்றிலேயேஇவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்தொடர்பான விசாரணை செய்த
ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும்
இஸ்லாம் பாட புத்தகங்கள் சில தொடர்பில் விமர்சனங்கள் முன்
வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அவை திருத்தப்படவேண்டும் எனவும்
கூறப்பட்டிருந்தது..
Discussion about this post