எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சேவையில் ஈடுபட முடியாது என்று அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலைப் போக்குவரத்துச் சேவைச் சங்கம் எச்சரித்துள்ளது.
இதுவரை அரசாங்கம் எந்த உதவிகளையுமு் வழங்காவிட்டாலும் பரீட்சை மற்றும் கல்வி தொடர்பாக அக்கறை காரணமாக போக்குவரத்துச் சேவையை வழங்கினோம் என்று தெரிவித்துள்ள அந்தச் சங்கத்தின் தலைவர் ஹரிச்சந்திர பத்மசிறி, வெள்ளிக்கிழமைக்கு முன்னர் தீர்வை முன்வைக்காவிட்டால், முதலாம் திகதி முதல் சேவையில் ஈடுபடுவது கடினம் என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post