நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு அருகாமையில் நாளைய தினம் (01) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேறகொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாளை கறுப்புக கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தாக்குதல்
இதேவேளை நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் பாடசாலைகளுக்கு எதிரில் இந்த கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
பாடசாலைகளுக்கு எதிரில் கறுப்புக் கொடிகள் மற்றும் கறுப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
அத்துடன் காவல்துறையினரின் தாக்குதல்களை எதிர்த்து எதிர்வரும் 2ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பாடசாலைகளுக்கு எதிரில் ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் பெற்றோர்களும் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில், எதிர்வரும் 4ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்பிற்கு அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறினால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் காவல்தறையினர் நடத்திய தாக்குதல்களில் 10 ஆசிரியர்கள் காயமடைந்தனர் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post