மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பஸ் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (23) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த தனியார் சொகுசு பஸ் சம்பவ தினமான நேற்று இரவு 10 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த போது சத்துருக்கோண்டான் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதியதையடுத்து சம்பவ இடத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மட்டு, போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் குறித்த பெண் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் கொக்குவில் பொலிசாருக்கு தொடர்பு கொள்ளுமாறும் பொலிசார் போதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post