அரசியல் செய்ய முடியாத நிலையில் பஸில் அமெரிக்கா நோக்கிப் பறந்துவிட்டார். அதனால் சிறிலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி, சிதறு தேங்காய் உடைப்பது போல சிதறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி சிதறியுள்ளதால், அதிருப்தி நிலையில் உள்ளவர்கள் எம்முடன் இணைவார்கள்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காக்க நாம் எதையும் செய்வோம் என்பது அனைவரும் அறிந்த விடயம். மக்கள் ஆணையைக் காக்கவே நாம் அமைச்சுப் பதவிகளை இழந்தோம். மாறாக சலுகைகளுக்காக அரசியல் நடத்துவது கிடையாது என்றார்.
Discussion about this post