நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணத் தவறிய ஜனாதிபதியும், அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்று, மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“கோ கோத்தா கோ” “பஸில் காகம்” என்பன போன்ற கோஷங்களை எழுப்பியும், பாதாகைகளைத் தாங்கியவாறும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து சபாநாயகர் சபை நடவடிக்கைகளைச் சிறிது நேரம் ஒத்திவைத்தார்.
Discussion about this post