தற்போது அரசாங்கம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், ஆளும்கட்சிக்குள் கடும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்கள் அரசியல் எதிர்காலம் தொடர்பான அச்சத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவி விலகல் கடிதங்களைக் கையளித்திருந்தனர்.
ஆயினும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச பதவி விலகல் கடிதத்தில் கையொப்பம் இடவில்லை அல்லது கையொப்படமிட மறுத்துவிட்டார் என்று அறியமுடிகின்றது. அதேநேரம் ஜி.எல்.பீரிஸ் மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோரும் அந்தச் சந்தர்ப்பத்தில் கையொப்பம் இடவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடுமையாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவைத் திட்டினார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ச சகோதார்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post