முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளார் என்று தெரிவிக்கப்படும் நிலையில், அந்த வெற்றிடத்துக்கு மீண்டும் பஸில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் போராட்டங்களை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பஸில் ராஜபக்ச விலகிய நிலையில், அந்த வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
தற்போது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தம்மிக்க பெரோரா பதவி விலகினால் கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கு அந்த பதவியை வழங்க வேண்டும் என்று கட்சியின் உறுப்பினர்களில் அதிகமானவர்கள் கோரியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post