பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராவது தொடர்பாகவோ முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்ற 22ஆவது திருத்தச் சட்டத்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 22ஆவது அரசமைப்பு திருத்தம் காரணமாக ராஜபக்ச குடும்பத்துக்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, பஸில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் இரட்டை பிரஜாவுரிமையை கோத்தாபய ராஜபக்சவை போன்று இரத்து வேண்டும் என பசில் ராஜபக்சவுக்கு எதிராக சமல் ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்து குடும்பத்துக்குள் கடும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் பஸில் ராஜபக்ச திடீரென இலங்கை வர முடிவு செய்துள்ளளார் என்றும் கூறப்படுகின்றது.
Discussion about this post