போதைப்பொருள் விற்பனை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருடியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் நேற்று ஒருவர் வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், வைரவப்புளியங்குளம், குருமன்காடு, தோணிக்கல் ஆகிய இடங்களில் பட்டப் பகலில் பூட்டியிருந்த 5 வீடுகளில் திருட்டுக்கள் நடைபெற்றிருந்தன.
சமையலறைப் புகைக்கூண்டு வழியாக உள்நுழைந்து நகைகள், பணம், கைபேசி, கமரா போன்ற பொருள்கள் திருடப்பட்டிருந்தன. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன.
முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணகைளை மேற்கொண்ட பொலிஸார், 24 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். திருடப்பட்டிருந்த கைபேசி, கைக்கடிகாரம், கமரா, உருக்கப்பட்ட நகைகள் என்பன அந்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் போதைப் பொருள் விற்பனை செய்தமை மற்றும் 5 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post