கனடாவின் மிக பிரபலமான 15 நகரங்களில் இந்த ஆண்டு பிறந்ததில் இருந்து ஒவ்வொரு மாதமும் வாடகை கட்டணம் அதிகரித்தே வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கனடாவில் குடியிருப்புகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறை மிகுந்து காணப்படுவதாகவே கூறுகின்றனர். இதனாலையே பெரும்பாலான பிரபல நகரங்களில் வாடகை கட்டணமானது உயர்வதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்கூவர் நாட்டின் வாடகை கட்டணத்தை பொறுத்தமட்டில் உச்சத்தில் இருக்கும் நகரமாக வான்கூவர் உள்ளது. இங்கு ஒரு படுக்கையறை அபார்ட்மெண்டிற்கு சராசரி மாத வாடகை $2,600 மற்றும் இரண்டு படுக்கையறைக்கு $3,800.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஒரு படுக்கையறை அபார்ட்மெண்டிற்கு மாத வாடகை 18.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ரொறன்ரோ வாடகை கட்டண உயர்வில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஒரு படுக்கையறை அபார்ட்மெண்டிற்கு சராசரி மாத வாடகை $2,400 மற்றும் இரண்டு படுக்கையறைக்கு $3,090 என தெரியவந்துள்ளது. ரொறன்ரோவில் கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் சராசரியாக 20 சதவீதம் அளவுக்கு வாடகை கட்டணம் அதிகரித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபி பகுதியில், கடந்த ஆண்டை விட 14.1 சதவீதம் அதிகரித்து, ஒரு படுக்கையறை அபார்ட்மெண்டிற்கு சராசரி மாத வாடகை $2,350 மற்றும் இரண்டு படுக்கையறைக்கு $3,000 என தெரிவிக்கின்றனர்.
மேலும் விக்டோரியா மற்றும் Kitchener பகுதிகளில் ஒரு படுக்கையறை அபார்ட்மெண்டிற்கு சராசரி மாத வாடகை $2,000 மற்றும் 1,880 டொலர் எனவும் இரண்டு படுக்கையறைக்கு $2,500 மற்றும் $2,250 என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Discussion about this post