பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்து “கட்டார் சேரிட்டி” தொண்டு நிறுவனம் மீது இலங்கை அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்ப்பதற்கான உதவிகள் தொடர்பில் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர் காஞ்சன வீரசேகர கட்டார் பயணித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமைச்சர் காஞ்சன வீரசேகர தனது ருவிற்றர் பக்கத்தில், ’கட்டார் தொண்டு நிறுவன அதிகாரிகளைச் சந்தித்தேன். 2019ஆம் ஆண்டு இந்த நிறுவனத்துக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்கும் தீர்மானத்தைப் பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கட்டார் சேரிட்டி தொண்டு நிறுவனம் நிதி உதவி வழங்கியது என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்த அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்தது. ‘கட்டார் சேரிட்டி ’ கட்டார் அரசாங்கத்தின் முக்கியமான தொண்டு நிறுவனமாகும்.
Discussion about this post