பலாங்கொடை பகுதியில் 310 கிலோகிராம் நிறையுடைய நீல மாணிக்கக்கல் ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின்
தலைவர் திலக் வீரசிங்க 15 இலட்சத்து 50 ஆயிரம் கரட் பெறுமதியான நீல மாணிக்கக்கல் ஒன்றே கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட மாணிக்கக்கல்லை முழுமையாக சோதித்து
சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மிகப் பெரிய நீல நிற மாணிக்கக்கல் இதுவென குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post