பேத்தியுடைய கணவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று 67 வயதுப் பெண் ஒருவர் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி மதுபோதையில் வந்த பேத்தியின் கணவர், தனக்கு பலவந்தமான மது பருக்கி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பெண்ணின் முறைப்பாட்டுக்கு அமைய 38 வயதான சந்தேகநபர் முள்ளியவளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் பெண் மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாங்குளம் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Discussion about this post