அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நாய் பல ஊழியர்களைக் கடித்ததால் அது வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் ஷெபர்ட் (German Shepherd) வகையைச் சேர்ந்த அந்த 2 வயது நாயின் பெயர் கமாண்டர் (Commander). எனினும் மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட கமாண்டர் இப்போது எங்கே இருக்கிறது என்கின்ற விவரங்கள் வெளியாகவில்லை.
கடந்த 2021ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகைக்கு வந்த Commander , அமெரிக்க உளவுச் சேவைப் பிரிவில் பணியாற்றும் 11 அதிகாரிகளைக் கடித்துள்ளது.
அதேவேளை Commander இடம் கடி வாங்கிய ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று CNN கூறுகிறது.
ஏனெனில் நாய் வெள்ளை மாளிகையின் மற்ற ஊழியர்களையும் கடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் அமெரிக்க அதிபரும் அவரது மனைவியும் ஊழியர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள் என்று அவர்களின் பேச்சாளர் எலிசபெத் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
இந்நிலையில் கமாண்டர் கடைசியாகச் சென்ற மாதம் 30ஆம் தேதி வெள்ளை மாளிகையில் காணப்பட்டதாகவும் அதன் பின்னர் Commander அங்கில்லில்லை எனவும் கூறப்படுகின்றது.
Discussion about this post