தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டவரைவு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டவரைவு மீதான விவாதம் நேற்று நடைபெற்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் அதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டன.
இரா.சம்பந்தன் மற்றும் சி.விக்னேஸ்வரன் ஆகியோரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தனர். அந்தச் சட்டவரைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் சட்டவரைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றினார்.
சட்டவரைவுமீது மீது வாக்கெடுப்பு கோரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டவரைவுக்கு ஆதரவாக 86 பேரும், எதிராக 35 பேரும் வாக்களித்தனர்.
சட்டவரைவு மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் இரா.சம்பந்தன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் நாடாளுமன்ற அமர்வில் இருந்து வெளியேறியிருந்தனர்.
Discussion about this post