விற்றமின் ஏ, சி, தாதுக்கள் மற்றும் ஆன்டி ஒக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள பப்பாப்பழம் உடலுக்கு நல்லதுதான் என்றாலும் சிலருக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே உடலுக்கு நன்மை பயக்கும் என கருதி அதிகமாக சாப்பிடுவதும் தீமையை ஏற்படுத்திவிடும்.
ஆகவே சாப்பிடுவதற்கு முன்னர் பின்வரும் சில விடயங்களை கவனிப்பது நல்லது.
பப்பாளியில் பப்பேன் என்ற என்சைம் இருப்பதால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வீக்கம், தலைசுற்றல், தலைவலி, சொறி போன்ற அலர்ஜிகள் ஏற்படும்.
பழத்தின் தோலில் லேடெக்ஸ் உள்ளது. இது வயிற்றில் எரிச்சல் மற்றும் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
புளித்த பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது.
பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தின் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.
மற்ற அனைத்து நார்ச்சத்துள்ள பழங்களைப் போலவே பப்பாளியும் அதிக அளவில் உட்கொண்டால் வயிற்றுப்போக்கை மோசமாக்கும்.
Discussion about this post