பப்பாப் பழம் எல்லா காலங்களிலும் மலிவாக கிடைக்கக்கூடிய பழமாகும். அது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதன் மஞ்சள், சிவப்பு நிற வண்ணம் மனதை கவர்ந்துவிடும். பப்பாப் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் நிறைய சத்துக்கள் உள்ளன.
தொடர்ந்து பப்பாளியை சாப்பிட்டு வந்தால் ஆண்மை தன்மை பெருகும், இரத்த விருத்தி அடையும், ஞாபக சக்தி உண்டாக்கும். ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யும்.
ஆனால், ஒரு சிலர் மட்டும் இந்த பப்பாளி பழத்தை சாப்பிடவே கூடாது. அப்படி தப்பித்தவறி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும். அவர்கள் யார் என்று பார்ப்போம்
பப்பாளி பழத்தை அதிகளவில் சாப்பிட்டுவிட்டால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயத்தை ஆற விடாமல் செய்து விடும். இதய நோயாளிகள் அதிக அளவு பப்பாளி பழத்தை சாப்பிட்டால், அது உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும்.
ஆஸ்துமா பப்பாளியை அதிகமாக சாப்பிட்டால் அதில் உள்ள பப்பேன் என்ற நொதி ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். இதனால், ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்ற சுவாரப் பிரச்சினைகள் ஏற்படும்.
கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிடக்கூடாது. அப்படி அதிகமாக சாப்பிட்டால் அது கருவுறுதலை பாதித்துவிடும். தெரியாமல் பப்பாளி அதிகமாக சாப்பிட்டுவிட்டால், சவ்வுகளை சேதப்படுத்தி கருக்கலைப்பை ஏற்படுத்திவிடும்.
நரம்பு மண்டலம் அதிகமாக பப்பாளியை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்தில் அழுத்தம் கொடுத்துவிடும். பக்கவிளைவுகள் அதிகமாக பப்பாளியை சாப்பிடுவதன் மூலம் தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், தலைவலி போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
Discussion about this post