திங்கட்கிழமையன்று சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த பனிப்பாறைச்சரிவில் கனேடிய இளம்பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
திங்கட்கிழமையன்று, சுவிட்சர்லாந்திலுள்ள Valais மாகாணத்திலுள்ள Zermatt என்னுமிடத்திலுள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றினருகில் பனிப்பாறைச்சரிவு ஏற்பட்டது. அதில், மூன்று பேர் கொல்லப்பட்டார்கள். உயிரிழந்தவர்களில் ஒருவர் கனடா நாட்டவரான இளம்பெண் என சுவிஸ் பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள்.
அவருடன் 15 வயது அமெரிக்க இளைஞர் ஒருவரும், 58 வயதான சுவிஸ் நாட்டவர் ஒருவரும் கூட பனிப்பாறைச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில், 30 வயது ஆண் ஒருவரும் மாயமாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவர் பனிக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பொலிசார் சம்பந்தப்பட்டவர்கள் யாருடைய பெயரையும் வெளியிடவில்லை.
Discussion about this post