இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து நிலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
நாட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், அதை வெறுமனே வேடிக்கை பார்க்கத் தன்னால் முடியாது என்று அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புரிமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றைக் கடந்து எப்போதும் மனட்சாட்சிக்குக் கட்டுப்படுகின்றேன் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, சீத்தாவக்க அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டுள்ள பலர் தங்கள் பதவிகளில் இருந்து விலகும் தீர்மானத்துக்கு வந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post