நாடாளுமுன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா இன்று தனது பதவியிலிருந்து விலகுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தனது பதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றில் இருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.
அவர் கடந்த 22ஆம் திகதி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.
ஜூன் 24ஆம் திகதி முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராகப் பதவியேற்ற அவர், ஜூலை 10ஆம் திகதி பதவியில் இருந்து விலகினார். 16 நாள்கள் குறுகிய காலமே அமைச்சராக பதவி வகித்தார்.
8 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நேற்று முற்பகல் தம்மிக்க பெரேராவும் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்களிப்பில் கலந்து கொண்டார்.
இந்தநிலையில் அவர் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post