இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ பதவியிலிருந்து விலகியுள்ளார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதிவிடுள்ள டுவிற்றர் பதிவொன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
எம்.எம்.சி.பெர்டினாண்டோவின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் அதானி குழுமம் சம்பந்தப்பட்ட மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி திட்டம் தொடர்பாக கடந்த 10ஆம் திகதி கோப் குழு விசாரணையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ மன்னிப்பு கோரியிருந்தார். இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
Discussion about this post