மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் இன்று கையளித்துள்ளார்.
இந்தத் தகவலை மஹிந்த ராஜபக்சவின் மகனும், பிரதமரின் பிரதானியுமான யோசித்த ராஜபக்ச இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
கொழும்பில் வன்முறைகள் உச்சம் பெற்ற பின்னரே மஹிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
அதேவேளை, அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளில் இருந்து விலகிக் கொண்டுள்ளனர்.
நாட்டின் பல இடங்களில் இவர்களின் பதவி விலகலைப் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
Discussion about this post