பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை மறுதினம் திங்கட்கிழமை பதவி விலகவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதம அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
நாடு தழுவிய ரீதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் நடவடிக்கை, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் மற்றும் அரசின் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக இதன்போது விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.
அவ்வேளையிலேயே இடைக்கால அரசமைப்பதற்கு பதவி விலகுமாறு, பிரதமரிடம் , ஜனாதிபதி கோரிக்கை விடுத்தாரென அறியமுடிகின்றது. இதற்கு பிரதமரும் சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.
பிரதமர் பதவி துறந்தால், அமைச்சரவையும் தானாக கலைந்துவிடும். அதன்பின்னர் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசமைப்பதே ஜனாதிபதியின் திட்டமாக இருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறுகிய காலப்பகுதிக்குள் பொதுத்தேர்தலொன்றுக்கு செல்வது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
Discussion about this post