பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை மஹிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயினும் இந்தத் தகவலை இதுவரை உறுதிப்படுத்த முடியாதுள்ளபோதும், மஹிந்த ராஜபக்ச இன்று அநுராதபுரம் ருவன்மலி சாயாவுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளார் என்று அறிய முடிகின்றது.
இது தொடர்பில் நாளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார் என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
Discussion about this post