இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்கியமை இலங்கை மக்களுக்குக் கிடைத்த தோல்வி என ஜனக ரத்நாயக்க Janaka Ratnayake தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய ரத்நாயக்க,
பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையை நாடாளுமன்றம் நிறைவேற்றிய சிறிது நேரத்திலேயே, ஜனாதிபதித் தேர்தலில் தான் கண்டிப்பாக போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்தத் தோல்வி என்னுடையது அல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்குமான தோல்வி. இந்த நீக்கம் குறித்து எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,” என்றார்.
“நான் என் நாற்காலியையும் மேசையையும் எடுத்துக்கொள்கிறேன். நேற்றே அனைத்தையும் பேக் செய்துவிட்டேன்.
“எதிர்காலத்தில் ஒரு அரசாங்கத்தை எடுப்பதற்கான அடிப்படை நடவடிக்கையாக இது இருக்கும் என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று கூறியுள்ளேன்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவியில் இருந்து ரத்நாயக்க பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை நேற்று (24) மாலை நாடாளுமன்றத்தில் 43 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதுடன், 123 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாகவும், 77 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
Discussion about this post