ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவில் இருந்து விலகுவது தொடர்பாகத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என்று அவரது நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களின் வன்முறையை அடுத்து, ராஜபக்சக்கள் மீதான மக்களின் கோபம் பலமடங்கு அதிகரித்துள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் பூர்வீக இல்லம் முதல் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகள் மக்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக்சவின மகனான யோசித்த ராஜபக்சவுக்குச் சொந்தமான ஆடம்பர விடுதி ஒன்றும் தீயிடப்பட்டுள்ளது.
ராஜபக்சக்கள் மீதான மக்களின் கோபம் கொழுந்து விட்டு எரியும் நிலையில், தொடர்ந்தும் பதவியில் நீடிப்பது ஏற்புடையதாக இருக்காது என்று கோத்தாபய ராஜபக்ச சிந்திக்கின்றார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலம் ஏறக்குறைய அஸ்தமன நிலைமையை எட்டியுள்ள நிலையில், ராஜபக்சக்களில் பெரும்பாலானானோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் மனநிலையில் உள்ளனர என்றும் கூறப்படுகின்றது.
Discussion about this post