பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என அரசின் பிரதான கொறடாவான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் முடிந்த பின்னர் நடைபெற்ற ஆளும் கட்சிக் குழுக்களின் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை விடுத்து தனது பதவி விலகும் நோக்கத்தை நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என்று முன்னதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
ஆயினும் பிரதமர், அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நேற்று மாலை சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை அடுத்து மஹிந்த ராஜபக்ச தனது திட்டத்தை மாற்றியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post