நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை நாடாளுமன்றச் செயலாளரிடம் கையளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று தெரிவித்தார்.
கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
தமது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதன் மூலம் பொதுஜன பெரமுன கட்சியினூடாக பொருத்தமான ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை புகைப்படம் எடுத்தவர் காலமானார்
1987 இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்திமீது , அணிவகுப்பு மரியாதையின்போது கடற்படை வீரர் ஒருவர் தாக்குதல் நடத்தியமை தத்துரூபமாக புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞர் சேன விதானகம காலமானார்.
ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதை புகைப்படம் எடுத்ததன் மூலம் இவர் உலகப் புகழ் பெற்ற புகைப்பட கலைஞராக மதிக்கப்பட்டார்.
ஜூலை மாதம் 30 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்தல் ராஜீவ்காந்தி அணிவகுப்பின் போது கடற்படை வீரர் ஒருவரால் துப்பாக்கியால் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post