ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு நேசக்கரம்நீட்டி, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார – கட்சியில் வகித்த அனைத்து பதவிகளை பறிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிரடியாக தீர்மானித்துள்ளது.
இதன்படி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரச்சார செயலாளர், உப செயலாளர் மற்றும் தம்பதெனிய தொகுதி அமைப்பாளர் பதவிகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மத்திய செயற்குழு உறுப்பினர் என்ற அந்தஸ்த்தையும் இழந்துள்ள சாந்த பண்டார, விரைவில் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்படுவாரென ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவிப்பு விடுத்தார்.
Discussion about this post