இலங்கைக்கான வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் கடந்த மார்ச் மாதத்தில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பெப்ரவரியில் 205 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இலங்கை தொழிலாளர்களின் பணம், மார்ச் மாதத்தில் 318 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 612 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றிருந்தது.
இதேவேளை, மார்ச் மாத தொடக்கத்திலிருந்து இலங்கை நாணயத்தை மிதக்கவிட, மத்திய வங்கி முடிவு செய்ததை அடுத்து இந்தச் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
Discussion about this post