அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை குறிப்பிட்டு, உடனடி போர்நிறுத்தம் வேண்டும் என கனடா அழைப்பு விடுப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் திட்டம்
காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, இஸ்ரேல் முன்வைத்துள்ள 3 கட்ட போர் நிறுத்தத்தை ஹமாஸ் படைகள் ஆதரித்துள்ளதாக தகவல் வெளியானது.
இஸ்ரேலின் திட்டம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் மொத்தமாக வெளியேற வேண்டும்.
எஞ்சியிருக்கும் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும், இருதரப்பும் ஒப்பந்தங்கள் அடிப்படையில் செயல்பட்டால் விரோதங்களை களைய முடியும் என்று கூறினார்.
போர் நிறுத்த அழைப்பு
இந்த நிலையில் உடனடி போர் நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், ”உடனடி போர்நிறுத்தம், தடையில்லா மனிதாபிமான உதவிகளை அவசரமாக அதிகரிப்பது மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது.
துயரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜோ பைடனால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஒரு வாய்ப்பாகும். மேலும் அமைதிக்கான பாதைக்கு திரும்ப வேண்டும். அனைத்து தரப்பினரும் அதை கண்டிப்பாக கைப்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Discussion about this post