மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு 6 மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்த ரோபோ சங்கர் தற்போது இருக்கும் விதத்தைப் பார்த்து ரசிகர்கள் வியந்து போயுள்ளார்கள்.
ரோபோ சங்கர்
நகைச்சுவை நடிகராக பிரபலமான ரோபோ சங்கர் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பின் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பின்னர் தான் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். தொடர்ந்தும், மாரி, விஸ்வாசம், வேலைக்காரன், பிகில் போன்ற படங்கள் இவரை இன்னும் பிரபலமாக்கியது.
ரோபோ சங்கர் எப்போதும் கொளு கொளுவென கொஞ்சம் அதிக எடையுடன் இருந்த ரோபோ சங்கர் பார்க்கவே பரிதாபமாக மாறியிருந்தார்.
தற்போதைய நிலை
ரோபோ சங்கர் 6 மாத காலமாக பல உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக எடையிழந்து படும் மோசகாக இருந்த ரோபோ சங்கரா இது என வாய்ப்பிளக்கும் வகையில் தோற்றம் எல்லாம் மாற்றியிருக்கிறார்.
அந்தவகையில், இவர் தற்போது மதுரையில் இடம்பெற்ற 37ஆவது ஆணழகன் போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு அசத்தியிருந்தார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், 6 மாதங்களாக உடற்பயிற்சி எதுவும் இல்லாமல் படுத்தபடுக்கையாகி இருந்தேன். ஆனால் இன்று அதையெல்லாம் தாண்டி வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இதை எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்திருக்கிறார்.
Discussion about this post