பங்களாதேஷின் (Bangladesh) இடைக்கால அரசில் மேலும் நான்கு ஆலோசகர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஷேக் ஹசீனா (Sheikh Hasina) தனது பிரதமர் பதவியை பதவிவிலகல் செய்துவிட்டு இந்தியாவில் (India) தஞ்சம் அடைந்த நிலையில் பங்களாதேஷ் இராணுவம் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அறிவித்திருந்தது.
பொருளாதார வல்லுனர்அதன்படி நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (Muhammad Yunus) தலைமையில் இடைக்கால அரசை இராணுவம் அமைத்தது.இந்த இடைக்கால அரசில் 17 ஆலோசகர்கள் இடம்பிடித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் 4 பேர் இடைக்கால அரசில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார வல்லுனர் வஹிதுதீன் மெஹ்மூத் (Wahiduddin Mehmood), முன்னாள் அமைச்சரவை செயலாளர் அலி இமாம் மஜும்தார் (Ali Imam Majumdar), முன்னாள் மின்துறை செயலாளர் முகமது பொளஜுல் கபிர் கான் (Muhammad Polajul Kabir Khan), லெப்டினன் ஜெனரல் ஜஹாங்கீர் அலாம் சவுத்ரி (Jahangir Alam Chowdhury) ஆகியோர் இவ்வாறு இடைகால அரசில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post