2-ம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்த ஒருவரை நாடாளுமன்றில் வைத்து கௌரவித்து யூத மக்களின் நினைவுகளை மீறியது தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் கடந்த 22 வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் 2-ம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்றும் லட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர் எனவும் தகவல் பரவியது.
அதனை தொடர்ந்து அவரை கௌரவித்தமை தொடர்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, இந்த விவகாரம் கனடா நாடாளுமன்றத்தை முழுவதுமாக தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது, இந்த நிகழ்வுக்கு வருந்துகிறேன்.
அப்போதைய சூழலை அறியாமல் யூத மக்களின் நினைவுகளை மீறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
Discussion about this post