வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு 6 பவுண் நகை திருட்டுப்போயுள்ளது என வீட்டு உரிமையாளரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலுள்ள இறப்பு வீடொன்று சென்ற வேளை வீட்டின் முன்கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் 6 பவுண் நகையைத் திருடிச் சென்றுள்ளனர் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post